• Sep 29 2025

கரூர் கோர தாண்டவத்தில் மேலும் ஒருவர் பலி..! அதிர்ச்சி தரும் தகவல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சினிமாவில் இருந்து  அரசியலுக்கு  வந்தவர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து  மக்களை சந்தித்து வருகின்றார்.  அதில் கரூர் மாவட்ட மக்களை சந்திக்க சென்ற போது பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி  பலர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில்,  கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது.  கரூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா என்பவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தளபதி விஜய்  நாமக்கல் மாவட்டத்தில் தனது பரப்புரையை முடித்த கையோடு கரூர் சென்றார்.  அப்போது அங்கு மின்சாரம் தடைப்பட்டது.  கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர். இந்த கூட்டத்தில் சிக்கி ஐந்து குழந்தைகள்  உட்பட  40 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது 

மேலும் இதில் இரண்டு கர்ப்பிணிகள் அடங்குவதாகவும்  அதிர்ச்சி தகவல் வெளியானது.  இவ்வாறான நிலையிலே தற்போது மேலும் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  தலா 20 லட்சமும்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு  தல 2 லட்சமும் வழங்குவதாக  தவெக தலைவர்  விஜய் தெரிவித்து இருந்தார். 



Advertisement

Advertisement