• Nov 23 2025

உதவி செய்றத சொல்லி காட்டக் கூடாது.. KPY பாலாவின் செயல்களைக் கேள்வி எழுப்பிய காஜல் பசுபதி.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா, சமூக சேவைகள், மற்றும் ஊடக உலகம் எல்லாம் இன்று ஒரே நேரத்தில் கலந்துரையாடப்படும் ஒரே விஷயமாக நடிகர் பாலா வழங்கும் உதவி மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மை நிலைமைகள் என்பன காணப்படுகின்றன.


நடிகர் பாலா தனது உதவிகளுக்காக சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை காஜல் பசுபதி வெளியிட்ட கருத்து சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஒரு நேர்காணலில் காஜல் பசுபதி, "உதவின்றது யாருக்கும் தெரியாமல் பண்ணனும், உதவிய சொல்லி காட்டவே கூடாது.. ஆனா நீ வீடியோ எடுத்துப் போடுற..! பெரியவங்க, வயசானவங்க கூட உன் காலில விழுறாங்க... அதை பத்தி எல்லாம் உனக்கு கவலை இல்ல.. நீ கொடுக்கிற பழைய ஆம்புலன்ஸ்ஸ ஏழைங்க ஆத்திர அவசரத்துக்குப் போகும் போது பாதிலையே நின்னு போச்சு என்றால் என்ன பண்றது? உயிர் திரும்ப வருமா? ஏழைங்களா ஏமாத்த கூடாது...." எனக் கூறியுள்ளார். 

இந்த வாக்கியம், பலருக்கும் உன்னதமான உண்மையை உணர்த்துகிறது. உதவிகளை வெளிக்காட்டாமல் சமூக நலனுக்காக செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.

Advertisement

Advertisement