இந்திய சினிமாவை அலற வைக்கும் வகையில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது. இப்படம் தேசிய அளவிலான கலாசாரப் பேரறிவை தூண்டும் படமாக காணப்பட்டது. ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான இப்படம், இந்தியாவின் அடித்தள பூர்வீக கலாசாரத்தையும், மரபுசார்ந்த விஷயங்களையும் பேசும் வகையில் அனைவரையும் கவர்ந்திருந்தது.
இப்போது, அந்தப் படத்தின் ப்ரீக்வெலாக உருவான ‘காந்தாரா – சாப்டர் 1’ திரைப்படம், அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம், காந்தாரா படத்தில் இடம்பெற்ற கதைக்கு முன்பாக நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இதில் ரிஷப் ஷெட்டி மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையாக, நடிகை ருக்மணி வசந்த் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கின்றார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், ஆன்மிகமும், அரசியலும் கலந்த சமூகப் போராட்டக் கதையை மையமாகக் கொண்டதெனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘என்னை ஆளும் சிவனே’ தற்பொழுது வெளியாகியுள்ளது. இது தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியிடப்பட்ட பாடலாகும். இந்த பாடல் மூலம், படத்தின் ஆன்மிக பின்னணி மற்றும் மத நம்பிக்கையின் ஆழமான அடையாளங்கள் வெளிப்படுகின்றன.
Listen News!