• Jun 23 2024

ஹீரோயின் கேரக்டரில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்.. காமெடிக்கு நடிகைக்கு பிரபல இயக்குனர் நிபந்தனை?

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த நடிகையிடம் ஹீரோயின் வேடம் தருவதாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறியதாகவும் ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் கவுண்டமணியுடன் இணைந்து பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை அனுஜா. குறிப்பாக பிரபு, குஷ்பு நடித்த ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில் மாலைக்கண் நோயால் அவதிப்படும் கேரக்டரில் நடித்த கவுண்டமணிக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் பிரபலம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘முதல் வசந்தம்’ படத்தில் அறிமுகம் ஆகிய அனுஜா, அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் கிளாமர் கேரக்டர், குத்தாட்ட நடனம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் காமெடி நடிகையாகவே திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தான் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் இரண்டாவது நாயகி கேரக்டர் தருவதாகவும் ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நிபந்தனை வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுஜா இரண்டாவது ஹீரோயின் என்ன, முதல் ஹீரோயின் கேரக்டர் கொடுத்தால் கூட நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று மறுத்து விட்டதாகவும் அதன் பிறகு பல நடிகைகளை அந்த இயக்குனர் தேடிய நிலையில் ஒரு பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் தற்போது வெளிவந்துள்ளதை அடுத்து அந்த பிரபல  இயக்குனர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement