• Jun 23 2024

நயன்தாரா மார்க்கெட் அவ்வளவு தானா? நேத்து ரீஎன்ட்ரி ஆன ஜோதிகா ஓரங்கட்டிய ஆச்சரியம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நாயகியாக ஜொலித்து வரும் நிலையில் சில ஆண்டுகள் நடிக்காமல் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்ட தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஓடிடியில் அதிக பார்வையாளர்கள் பெற்ற திரைப்படங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் கரீனா கபூர் நடித்த ’க்ரூ’ என்ற படம் உள்ளது. கரீனா கபூர், தபு மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்த இந்த படத்தை உலகம் முழுவதும் 16 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

இரண்டாவது இடத்திலும் கரீனா கபூர் நடித்த ’ஜானே ஜான்’ என்ற படம் தான் உள்ளது. இந்த படத்தை  16 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்த ’ஃபைட்டர்’ திரைப்படமும், நான்காவது இடத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த ’அனிமல்’ திரைப்படமும் உள்ளன. இந்த இரண்டு படங்களையும் உலகம் முழுவதும் 13 மில்லியனுக்கும் மேல் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஐந்தாவது இடத்தில் மாதவன், ஜோதிகா, அஜய் தேவகன் நடித்த ’சைத்தான்’ படம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தான் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த போதிலும் ஓடிடியில் இந்த படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement