• Apr 26 2024

''விஜய் அந்த விஷயத்த உடனே மாத்திக்கணும்'' – மனம் திறந்த சீமான்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது தம்பி விஜய்யின் “லியோ” படத்தின் தலைப்பை தமிழில் மாற்ற வேண்டும் வேண்டும் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அவர்கள் கூறுகையில் “தம்பி விஜய் படத்தை தமிழர்கள் தான் பார்க்கிறார்கள். நம்முடைய தாய் மொழியை அழியாமல் சிதயாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கிறது.

சமீப காலமான தம்பி விஜய்யின் படங்கள் தொடர்ந்து பிகில், விசில் என வருகிறது. அதனை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார் சீமான். இதே போன்று தளபதி விஜய் நடித்த பிகில், மாஸ்டர் படத்தின் தலைப்பும் இதே போன்ற சர்ச்சையான விஷயத்திற்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement