தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி திரைப்படங்களை மட்டுமின்றி, சமூக பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார். சமீபத்தில், தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு விஜய் சேதுபதி ஒரு முக்கியமான நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, அவ்அமைப்பின் கீழ் உள்ள திரைப்பட தொழிலாளர்களின் நலன் கருதி ரூ. 1.30 கோடி நன்கொடையாக அளித்துள்ளார். திரைப்பட உலகில் பின்தங்கிய தொழிலாளர்களுக்கு இதுவொரு பெரும் ஆதரவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் உதவிவரும் விஜய் சேதுபதி, தனது சிறப்பான மனநிலையில் திரைத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இது போன்ற உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகிறார்.
அவ்அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், விஜய் சேதுபதியின் தாராள மனப்பான்மையை பாராட்டி, இது போன்ற உதவிகள் தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். தொழிலாளர் நலன் குறித்து விஜய் சேதுபதி எடுத்திருக்கும் இந்த நல்ல முடிவு, அவரை ரசிகர்களிடம் மேலும் உயர்த்தியுள்ளது. திரைப்பட உலகில் ‘மக்கள் செல்லவன்’ என அவர் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் கூறலாம்.
இது முதல் முறை அல்ல விஜய் சேதுபதி, ஏற்கனவே பல்வேறு சமூகநல உதவிகளை செய்து வந்துள்ளார். கோவிட்-19 காலத்தில் திரைத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவியாக பொருளாதார ஆதரவு வழங்கியுள்ளார். அத்துடன் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகிறார்.
விஜய் சேதுபதி அளித்த நன்கொடை குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் அவரைத் தங்களுடைய இனிய வார்த்தைகளால் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!