• Feb 23 2025

கே.ஜி.எஃப் ஹீரோவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகும் ராமாயணா! வெளியான உண்மை இதோ..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய புராணக் கதைகளில் ஒன்றான ராமாயணத்தை  திரைப்படமாக உருவாக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரமாண்ட பொருள் செலவில் நிதேஷ் ராணா இயக்கத்தில் ராமாயணா என்ற படத்தை  உருவாக்குவதுடன் இப்படத்தில், முன்னணி நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தி வருகின்றது.

இதில் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய திரைப்பட உலகையே தன் பக்கமாக ஈர்த்த யாஷ், தற்போது ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடிக்க சம்மதித்துள்ளார். மிகப்பெரிய வெற்றியை நோக்கிய பயணமாக உருவாகும் ராமாயணா படத்தில் ராவணன் கதாபாத்திரத்திற்காக யாஷ் மிகுந்த தீவிரமாக தயாராகி வருகிறார். பண்டைய புராணங்களில் வருணிக்கப்படும் ராவணனின் ஆளுமையை அடையாளம் காட்ட, யாஷ் தனது உடல் மற்றும் நடிப்பை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.


இந்த பிரமாண்ட படத்திற்காக யாஷ் அதிகளவு சம்பளம்  பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது அவருடைய நடிப்புத் திறனைச் சிறப்பிக்கும் ஒரு முக்கியமான ஒப்பந்தமாகவும் கருதப்படுகிறது. இப்போது, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. யாஷ் போர்க்காட்சிகளில் சிறப்பாக நடிப்பதற்காக சண்டைப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். 

இந்திய சினிமாவின் மிகப்பெரிய புராணக் கதைகளில் ஒன்றான ராமாயணா, புதிய கோணத்தில், பிரமாண்ட முறையில் உருவாக்கப்படுவதால், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வை வெளியானதும், அது இணையதளத்தில் வைரலாக பரவியது. அத்துடன் இத்திரைப்படத்தை திரையில் காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Advertisement

Advertisement