• Jan 19 2025

முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகல.. ஜோதிகாவின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் அனிமல் பட வில்லன் பாபி தியோல் இந்தப் படத்திலும் வில்லனாக மிரட்டி உள்ளார்.

கங்குவா படத்திற்கு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார் சிறுத்தை சிவா. அந்த படம் தோல்வி அடைந்தது. அதன் பின்பு பிரம்மாண்ட செலவில் உருவாகும் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குவதால் இந்த படம் அவருக்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் கங்குவா படம் பற்றிய எதிர்பார்ப்பை இமையமலை உச்சிக்கே கொண்டு சென்றார். அவர் அளித்த பேட்டியில் இந்த படம் 2000 கோடியை வசூலிக்கும் அதற்கான ஆதாரத்தையும் வெளியிடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் சொல்லிய கருத்துக்களை இணைய வாசிகள் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.

d_i_a

இந்த நிலையில், நடிகையும் சூர்யாவின் மனைவியும் ஆன ஜோதிகா கங்குவா படம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், இதனை நான் சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமாவை விரும்பும் ரசிகையாக ஜோதிகாவாக எழுதுகிறேன். ஒரு நடிகராக  இருப்பதற்கும் சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக உள்ளது. கங்குவா படத்தின் முதல் அரை மணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லை. சவுண்ட் சிஸ்டமும் சரி இல்லை. ஆனால் குறைபாடு என்பது படத்தின் ஒரு பகுதி ஆகும்.

இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமா இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்துள்ளார். தற்போது ,கங்குவா படம் தொடர்பான நெகட்டிவ் விமர்சனம் என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது இரட்டை அர்த்த வசனங்கள்  பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் கமெண்ட்ஸ் அவர்கள் கொடுக்கவில்லை.

கங்குவா படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்சன் காட்சி போன்ற பாசிட்டிவ் விமர்சனங்களை மறந்து விட்டார்கள் என்று நினைக்கின்றேன். இந்த முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு உள்ளேயே கங்குவா பற்றிய நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வந்தன. அதை நினைத்து வருத்தம் அளிக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள்... நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு ஒன்றும் செய்யவில்லை என ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement