• May 10 2024

விஜய்சேதுபதியின் 51வது படம்.. டைட்டில் இதுதான்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் 50வது படம் ’மகாராஜா’ என்பதும் இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த படத்தில்  விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ்,  நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.



இந்த நிலையில் விஜய்சேதுபதி, இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் ’சத்தியமா பொய்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்தி நடிக்கும் இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement

Advertisement

Advertisement