• Feb 20 2026

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தியாகராஜா குமாரராஜா தனித்துவமான இயக்குநராக அறியப்படுகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே, அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார்.

இந்த படம் நாயர் (Noir) பாணியில் உருவாகியது. நாயர் படங்களில் குற்றப் பின்னணி, ஊழல் நிறைந்த உலகம், துணிவான நாயகன், வஞ்சகம் செய்யும் பெண் போன்ற கதைக்கள அமைப்புகள் இருக்கும். இதில் அவர் டிஜிட்டல் கலரிங்கைச் சேர்த்ததால், அது நியோ நாயர் திரைப்பட பாணி என்று அழைக்கப்பட்டது. 

இதன் பின்னர், இவர் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி உள்ளிட்ட நடிகர்களுடன் உருவான “சூப்பர் டீலக்ஸ்” படத்தை இயக்கினார். 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உலகளவில் கவனம் பெற்றது.


இந்த நிலையில், விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணையும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். 

மேலும் கிஷோர், ராஜ் பி ஷெட்டி உள்ளிட்ட பலர் கூட நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு “பாக்கெட் நாவல்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement