• Mar 26 2026

வயது ஒரு எண் தான்! Fitness இல் கலக்கும் ஜோதிகா.. ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ஜோதிகா தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியதும், ரசிகர்கள் அதை பெருமளவில் பகிர்ந்து வருகிறார்கள்.


சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில், நடிகை ஜோதிகா ஜிம்மில் தீவிர பயிற்சியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. 

இந்த வீடியோவினைப் பார்த்த ரசிகர்கள் “இந்த வயதிலும் இவ்வளவு ஃபிட் ஆக இருக்கிறாரே!” என்ற கமெண்ட்ஸ் மூலம் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

நடிகை ஜோதிகா எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என அறியப்படுகிறார். சினிமா வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுமுறை ஆகியவற்றை கடைப்பிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement