• Mar 20 2026

பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ்.! ‘சேயோன்’ படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘சேயோன்’. இந்த படம் குறித்த அப்டேட்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான Raaj Kamal Films International மூலம் தயாரித்து வருகிறார். புதிய கதைக்களத்துடன், வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

மேலும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. தனித்துவமான இசை ஸ்டைலுக்காக பிரபலமான சந்தோஷ் நாராயணன், ‘சேயோன்’ படத்திலும் புதுமையான பின்னணி இசையைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை ‘சேயோன்’ படத்தின் First Look போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தார். இதுவரை பார்த்திராத லுக் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சமூக வலைத்தளங்களில் First Look போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரெண்டாகியது.

இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் ‘சேயோன்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது.

புரோமோ வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று, அதிகளவான லைக்குகளை குவித்துள்ளது. 

Advertisement

Advertisement