நடிகர் விஜய் நடித்த 'சர்கார்’ என்ற படத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது போல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் விஜய்யை விட அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இதுவரை விஜய்யின் ரசிகர்களாக இருந்த நிலையில் தற்போது அவர்கள் விஜய் கட்சியின் தொண்டர்கள் ஆகியுள்ள நிலையில் பலர் தங்களுக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ , எம்பி மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் உள்ளனர்.
ஆனால் விஜய் கறாராக விஜய் மக்கள் மன்றத்தில் இருந்த எந்த நிர்வாகிகளுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்றும் முதல் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளும் உள்ள பிரபலமானவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்கார்’ திரைப்படத்தில் இது போன்ற ஒரு காட்சி வரும் என்பதும் ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதியில் உள்ள பிரபலங்கள் வேட்பாளராக தேர்வு செய்து, பின் அவர்கள் வெற்றி பெற்றவுடன் அவர்களில் இருந்து ஒருவரை முதல்வராக விஜய் தேர்ந்தெடுப்பார் என்பதும் தெரிந்தது.
அதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்திலும் அந்தந்த தொகுதியில் உள்ள பிரபலமானவர்களை வேட்பாளராக்கி வெற்றி பெற வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதல் தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தின் எந்த நிர்வாகிகளும் போட்டியிட சீட் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் கனவில் இருந்த பல விஜய் ரசிகர்களின் பிழைப்பில் மண் அள்ளி போட்டது போல் உள்ளது என்று வருத்தத்தில் ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Listen News!