இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ என்ற
திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி
மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ஒரே
ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில்
உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் சென்னையில் மட்டும் இந்த படம் 5 கோடி
ரூபாய் வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து‘கோலி
சோடா 2’ படம் உருவானது என்பதும்,
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த
வசூலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் முன்னணி ஓடிடி தளம் ஒன்றுக்காக விஜய்
மில்டன் ஒரு வெப் தொடரை
இயக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக
நடைபெற்று வந்தது. இந்த வெப் தொடருக்கு
அவர் ‘கோலி சோடா’ என்று
டைட்டில் வைத்துள்ளதை அடுத்து ‘கோலி சோடா’ படத்தை
தயாரித்த லிங்குசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தனது தயாரிப்பில் ‘கோலி சோடா 3’ என்ற
படத்தை விரைவில் அவர் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும்
அதனால் ‘கோலி சோடா’ டைட்டிலை
விஜய் மில்டன் பயன்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இந்த பிரச்சனை தற்போது
தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தால் அந்த டைட்டிலில் வேறு
திரைப்படம் தான் எடுக்க கூடாது
என்பது விதி, ஆனால் தொலைக்காட்சி தொடர் எடுப்பதற்கும், வெப் தொடர் எடுப்பதற்கும்
எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் ஏற்கனவே ஏராளமான திரைப்படங்களின் பெயர்களில் தொலைக்காட்சி சீரியல்கள் வந்து கொண்டிருப்பதையும் விஜய் மில்டன் சுட்டி காட்டியதாகவும் எனவே இந்த தலைப்பை
தான் பயன்படுத்துவதற்கு லிங்குசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்க
கூடாது என்றும் விஜய் மில்டன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கமும் இதை ஏற்றுக் கொண்டதால்
அநேகமாக ‘கோலி சோடா’ டைட்டில்
விஜய் மில்டனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!