தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தை இயக்குபவர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அட்லி, கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், எச் வினோத், திரிவிக்ரம்,
, ஆர்ஜே பாலாஜி, உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள்
பரிசீலனையில் உள்ளதாகவும் இவர்களில் ஒருவரை விஜய் விரைவில் தேர்வு செய்வார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தளபதி 69’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இயக்குனர்கள் பட்டியலில் இருந்து மூன்று பேரை விஜய் நீக்கிவிட்டதாக
கூறப்படுகிறது. விஜய் முதலில் நீக்கிய இயக்குனர் வெற்றிமாறன் என்றும் இந்த படம் ஒரு
குறுகிய கால தயாரிப்பு என்பதால்
வெற்றிமாறன் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்றும் விஜய் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதை நன்றாக இருந்தாலும்
தனது கடைசி திரைப்படம் ஒரு மாஸாக இருக்க
வேண்டும் என்றும் அது அவரது கதையில்
இல்லை என்றும் விஜய் அவரையும் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி கதை ஓகே என்றாலும்
ஆர்ஜே பாலாஜியிடம் தனது கடைசி படத்தை
கொடுத்து ரிஸ்க் எடுக்க விஜய் விரும்பவில்லை என்பதால் அவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தற்போது எச் வினோத், திரிவிக்ரம்
மற்றும் அட்லி ஆகியோர்தான் இருக்கும் நிலையில் இவர்கள் மூவரில் எச் வினோத்திற்கு அதிக
வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர்
மட்டுமின்றி திரைக்கதை அமைப்பதில் திறமையானவர் என்பதால் அவர் கண்டிப்பாக தனக்கு
ஒரு நல்ல வெற்றி படத்தை
உருவாக்கி தருவார் என்ற நம்பிக்கை விஜய்க்கு
ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் முதல் இடத்தில் எச் வினோத் இரண்டாவது
இடத்தில் திரிவிக்ரம் இருப்பதாக கூறப்படுகிறது. அட்லி ஏற்கனவே அல்லு அர்ஜுன் படத்தை தொடங்குவதற்கான பணியை மேற்கொண்டு உள்ளதால் அவரும் இந்த பட்டியலில் இருந்து
நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Listen News!