• Dec 04 2024

டபுள் எவிக்‌ஷனில் சிக்கிய மூவர்! இந்த வாரம் வெளியேறும் அந்த போட்டியாளர்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சின் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரையுமே எவிக்ஷன் செய்து வெளியே அனுப்பவில்லை. மேலும், புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளே நுழைந்துவிட்டார்கள்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் சவுந்தர்யா தான் இந்த முறை டைட்டில் அடிப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. மேலும், வைல்டு கார்டு போட்டியாளர்கள் எல்லாமே வேஸ்ட் பீஸ் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நாமினேட் ஆகி வருகின்றனர். 


இந்த வாரம் சாச்சனா, சுனிதா, விஷால், அருண், முத்துக்குமரன், விஜே ஆனந்தி, ஜாக்குலின், ரஞ்சித், தீபக், பவித்ரா, அன்ஷிதா என மொத்தம் 11 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். டேஞ்சர் ஜோனில் 3 பேர் இருக்கிறார்கள்.  சாச்சனா, சுனிதா மற்றும் ஆர்ஜே ஆனந்தி தான். ஆனந்தி நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி வந்த நிலையில், இந்த வாரம் சிக்கிய அவருக்கு பிஆர் டீமே பெரிதாக இல்லை என்றே தெரிகிறது.  இந்த 3 பேரில் ஒருவர் அல்லது 2 பேர் இந்த வாரம் வெளியேறப்போவது உறுதி என தகவல்கள் கசிந்துள்ளன. 

Advertisement

Advertisement