• Sep 19 2024

ஷுட்டிங்கிற்காக ஹைதராபாத் கிளம்பிய விஜய்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது 66 வது படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் ஆரம்பித்தது.இப்படத்தில் அவருடன் சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட நடிகர் சரத்குமார் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் இப்படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது, அனைத்து வகையான ரசிகர்கள் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த படம் இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

https://twitter.com/Vijay66FilmOffI/status/1521109861903175680

இந்நிலையில் ஹைதராபாத்-ல் பெரிய செட் அமைத்து நடக்கவுள்ள அப்பட ஷூட்டிங்கிற்கு தளபதி விஜய் சென்றுள்ளார். அப்போது ஹைதராபாத் ஏர்போர்ட்-ல் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement