• Jan 22 2026

விஜய் ஸ்மார்ட்டா இருக்காருல.. ஜனநாயகன் டப்பிங்கில் எடுத்த க்யூட் போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில்  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. 

ஜனநாயகன் படத்துக்கு  ஃப்ரீ ரிலீஸ் வியாபாரம் கூட மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் பிற மொழி ஓவர்சீஸ் வியாபாரம்  என்ற வகையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. ஜனநாயகன் திரைப்படம் கேரளா ரிலீஸ் திரையரங்கு உரிமை பெற்றதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

தமிழ் சினிமாவில்  பட்டையை கிளப்பிய விஜய், அரசியலிலும்  களம் இறங்கி  மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்.  இதனால்  இவருடைய  ஜனநாயகன் படம்  அரசியல் ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


ஜனநாயகன்  ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் டிஜிட்டல் விற்பனை முடிந்துள்ளது.  மேலும் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் உரிமைக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றதாம். இதற்கு  பல பிரபல நிறுவனங்களும் வெளியிட்டு ரைட்ஸை கைப்பற்ற போட்டி போட்டு வருகின்றதாம்.

இதனிடையே, ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா  எதிர்வரும் 27ஆம் தேதி மலேசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கில்  நடைபெற இருக்கின்றது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளன. இது  தொடர்பான  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

 

Advertisement

Advertisement