தமிழ் சினிமாவில் இசை மன்னராக திகழும் இசைஞானி இளையராஜா, தனது இசைப்பாடல்களுக்கான காப்புரிமையை மிகுந்த கடுமையுடன் காக்கும் ஒருவராக விளங்குகின்றார். அவருடைய இசைத் தொகுப்புகள் தமிழ் சினிமாவின் வரலாற்றை மட்டுமல்ல, உலக இசை வரலாற்றிலேயே தனித்துவமான அடையாளம் பெற்ற கலையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘Dude’ திரைப்படத்தில் அவரது பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக கூறி எழுந்த விவகாரம் தற்போது புத்தம் புதிய திருப்பத்தை கண்டுள்ளது.
அதாவது, ‘கருத்த மச்சான்’ மற்றும் 'நூறு வருஷம்’ போன்ற பாடல்கள் பயன்படுத்தியதற்கு அனுமதி பெறப்படவில்லை என்று இளையராஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சில வாரங்களாக விசாரிக்கப்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், ‘Dude’ படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் முக்கிய முடிவினை எடுத்துள்ளது.
அதாவது, பாடலை பயன்படுத்தியதற்காக தற்பொழுது இளையராஜாவிற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் டைட்டில் காரட்டில் நன்றி தெரிவிக்கப்படும் எனவும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது.
Listen News!