• Mar 11 2026

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம் நான்கு நாட்களில் வசூல் இத்தனை கோடியா..?

Mathumitha / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்த அடையாளம் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நான், சலீம், பிச்சைக்காரன் 1 & 2 போன்ற படங்களில் தனது தனிப்பட்ட முத்திரையை பதித்துள்ளார். அண்மையில் அவர் நடித்த ‘மார்கன்’ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து உள்ளது. 


அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல மதிப்பீடுகள் கிடைத்துள்ளன.


இந்நிலையில் மார்கன் திரைப்படம் திரைக்கு வந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement