• Nov 04 2026

விஜய் ஆண்டனி நடிப்பில் 'ககன மார்கன்'! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிகராக நடித்த படங்களில் பிச்சைக்காரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். 


தற்போது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ககன மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். 


ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள். வழக்கமான க்ரைம் த்ரில்லர் படமாக இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான அம்சங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் 1ஸ்ட லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement