• Jan 18 2025

நயன்தாரா விளம்பரம்! 50 வினாடிக்கு 5 கோடி! இது பகல் கொள்ளையா இருக்கே?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களினால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின்னர் 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். 


படங்களில் நடிப்பதோடு சொந்தமாக பிஸ்னஸ் செய்தும் வருகிறார். அத்தோடு விளம்பரங்களும் செய்து வருகிறார். இந்நிலையில் டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த விளம்பரத்தில் நடிக்க, அவர் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவரது ஒரு படத்திற்கான கட்டணம் என்று சொல்லப்படுகிறது.


படத்திற்கு கூட இந்த கட்டணம் இல்லை. மாக்ஸிமும் 10 கோடி தான் கொடுக்கிறார்கள். இவர் பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். ரஜினிகாந்த், ஷாருக்கான், ஜெயராம், நாகார்ஜூனா அக்கினேனி உள்ளிட்டோருடன் பணிபுரிந்த இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என்றே சொல்லலாம்.

Advertisement

Advertisement