• Apr 14 2026

விக்னேஷ் எழுத, இமான் பாட்டு பாட.. குலுக்கு குலுக்கு குத்தாட்டம் தான் சந்தானத்துக்கு! வெளியான சோங்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாகியது.

இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் படத்தின் இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார் சந்தானம். இதனை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார்.

குறித்த படத்திற்கு ' இங்க நான் தான் கிங்கு' என  பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பதோடு இதன் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சரிகம கைப்பற்றியுள்ளது.


இந்த நிலையில்,  'இங்க நான் தான் கிங்கு' படத்தின் பாடல் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி குறித்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதோடு, அதற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement