• Jan 19 2025

'கோட்' படத்தில் செம்ம சஸ்பென்ஸ் இருக்கு! விஜய் fans எங்கிருந்தாலும் வரவும்...!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தின்  படப்பிடிப்புகள் சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷூட்டிங்  வெளிநாடுகளில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலுக்கு முன்பாக கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய தினம் ரமலானுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், தற்போது நடிக்கும் கோட் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என கூறப்பட்டது. இதனை அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் உறுதி செய்துள்ளார்கள்.


அதன்படி அதிகபட்சமாக இந்த ஆண்டு தீபாவளிக்குள் கோட் படம் ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பை இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் ஜூன் மாதம் இந்தியன் 2, ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2, அக்டோபர் மாதம் வேட்டையன் போன்ற பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ள நிலையில், கோர் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அது மட்டுமின்றி யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடி ஆடியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் எதிர்வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இது தொடர்பிலான அப்டேட் கூட இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement