• Jul 26 2025

பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளுக்கு சப்பிறைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்.! வைரலான போட்டோ.!

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் தனது சிறப்பை நிரூபித்தவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படம் கோமாளியால் காமெடியையும், இரண்டாவது படமான லவ் டுடே மூலம் இளைய சமூகம் எதிர்பார்க்கும் காதலையும் மிக அழகாக கூறி, வெற்றியடைந்தவர்.

இன்றைய நாளான ஜூலை 25ம் தேதி, அவர் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன.


பிரதீப் ரங்கநாதன் தனது பயணத்தை யூடியூப் குறும்படங்களால் தொடங்கினார். அவரின் Whatsapp Kadhal என்ற குறும்படம் 2016-ஆம் ஆண்டு இணையத்தில் வைரலானது. அதே நேரத்தில் அவர் திரை உலகிலும் கால் பதிக்கத் தொடங்கினார்.

2019-ஆம் ஆண்டு கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதில் ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்தார். இதன் மூலம், அவரது இயக்கம் மற்றும் கதை சொல்லல் பாணி மக்கள் மனதில் இடம் பிடித்தது.


பின்னர் 2022-ஆம் ஆண்டு, அவர் லவ் டுடே என்ற படத்தில் நாயகனாகவும், இயக்குநராகவும் பணியாற்றினார். அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டானது. அதில் காதல், நகைச்சுவை, மற்றும் இளைய தலைமுறை மொபைல் கலாச்சார விவாதங்கள் என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்போது அவர் நடித்து வரும் அடுத்த படம் தான் லவ் இன்சுரன்ஸ் கம்பனி. இந்த படத்துக்கான முதல் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதலுக்கே இன்சுரன்ஸ் தேவையா? என்ற வகையில் புதுமையான கதையொன்று சினிமாவுக்குள் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளையொட்டி, பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன், அவருக்கென ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் பிரதீப் ரங்கநாதன் ஸ்டைலிஷ் ஹீரோவாக காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement