• Jul 26 2025

இனியாவை பிளான் பண்ணி ஏமாத்தும் சுதாகர்.! அப்பாவியாக சிக்கிய இனியா.. டுடே எபிசொட்.!

subiththira / 21 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, வீட்ட வந்த கோபி வாற வழியில எனக்கும் சுதாகருக்கும் சண்டை என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா எதுக்காக அவர் வந்து உங்ககிட்ட சண்டை போட்டாரு என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோபி சுதாகர் சொன்ன எல்லா விஷயத்தையும் பாக்கியா கிட்ட சொல்லுறார். இதனை தொடர்ந்து, ஈஸ்வரி கோபியை பார்த்து சுதாகருக்கு இப்புடி செய்ய தைரியம் வந்திட்டா என்று கேட்கிறார். 


பின் கோபி நான் பொலீஸ் ஸ்டேஷனில போய் சுதாகர் சொன்ன எல்லாத்தையும் கம்பிளைன்ட்டா எழுதி கொடுத்திட்டு வந்தேன் என்கிறார். மேலும் இனியாவ கவலைப்படாமல் அமைதியாக இருக்கச் சொல்லுறார். அதனை அடுத்து இனியா நிதீஷுக்கு போன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சுதாகர் நிதீஷ் போனை வாங்கி தான் இனியாவோட கதைக்கிறார்.

பின் சுதாகர் இனியாவ பார்த்து என்ர பையனை வேணாம் என்று சொல்லிட்ட பிறகு ஏன் போன் பண்ணுற என்று கேட்கிறார். அதுக்கு இனியா உங்க பையனோட சந்தோசமாக கதைக்க ஒன்னும் போன் பண்ணல உங்க போனுக்கு எடுத்தேன் நீங்க எடுக்கல அதுதான் நிதீஷுக்கு எடுத்தேன் என்கிறார். அதனை அடுத்து இனியா சுதாகரை பார்த்து எதுக்காக எங்க அப்பாவ அடிச்சனீங்க என்று கேட்கிறார். அதுக்கு சுதாகர் உங்க அப்பா தான் அடிக்க வந்தார் என்று சொல்லுறார்.


மறுநாள் காலையில இனியா பொலீஸ் ஸ்டேஷனில சுதாகர் பற்றிச் சொல்லப் போறார். அப்ப சுதாகர் போன் எடுத்து நீ நிதீஷுக்கு டிவோர்ஸை சீக்கிரமா கொடு என்கிறார். மேலும் ரெஸ்டாரெண்டையும் திருப்பிக் கொடுத்திடுறேன் என்கிறார். பின் இனியா சுதாகரை பார்க்க ரெஸ்டாரெண்டிற்கு போறார். அங்க நிதீஷ் போதையில் இருக்கிறார். அதை தொடர்ந்து, நிதீஷும் இனியாவும் அடிபடுறார்கள். பின் நிதீஷ் இறக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement