• Sep 08 2025

கூலி படம் பார்க்க வந்த ஸ்ருதி ஹாசனுக்கு காத்திருந்த ‘கூலி’ சோதனை..! வெளியான வீடியோ...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஹிட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் கூட்டணியாக இணைந்த ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெகுசிறப்பாக வெளியானது. அனிருத் இசையமைத்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல மாற்றி உள்ளனர்.


இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் படம் வெளியான நாளன்று, திரையரங்கில் ரசிகர்களுடன் கூலி திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்தபோது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஒரு நபர் அவரின் காரை தடுத்து நிறுத்த, ஸ்ருதி சிரித்தவாறே, "நான் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த படத்தில் நடித்துள்ளேன். என்னை உள்ளே விடுங்க!" என்று கேட்டுக் கொண்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement