• Feb 06 2025

ரெட்டை வேடத்தில் மிரட்ட வரும் அட்டகத்தி தினேஷ்.? வியந்து பாராட்டிய பிரபல இயக்குநர்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'ஈ' படத்தின் மூலம் சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக அறிமுகம் ஆனவர் தான் அட்டகத்தி தினேஷ். இதைத் தொடர்ந்து எவனோ ஒருவன், மௌன குரு, ஆடுகளம் போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும் இந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை.

சில வருடத்திற்கு பின்பு 'காதலிக்க நேரமில்லை' என்ற சீரியலில் நடித்த தினேஷுக்கு, நடிகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அட்டக்கத்தி திரைப்படம். அதில் நடித்து பிரபலம் ஆனவர் பிறகு தான் அவர் அடைமொழியோடு சேர்த்து அட்டக்கத்தி  தினேஷ் என அழைக்கப்பட்டார்.

d_i_a

இந்த படத்தில் நடித்ததற்காக தினேஷின் பெயர் விஜய் அவார்ட்ஸ் விருதுகளில் நாமினேட் செய்யப்பட்டது. அதன் பின்பு எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்தார். மேலும் பண்ணையாரும் பத்மினியும்  என்ற படத்தில் இவர் நடித்த கேமியா ரோல் மிகவும் கவனிக்கப்பட்டது.


2014 ஆம் ஆண்டு வெளியான குக்கூ  படத்தில் கண் தெரியாதவராக நடித்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்தாலும் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் எழுவதற்கு காரணமாக அமைந்தது. இதனால் தனது கண்ணை சரி செய்வதற்காக பல சிகிச்சைகள் மேற்கொண்டதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.


இறுதியில் இவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி ஆக அமைந்த படம் தான் லப்பர் பந்து திரைப்படம். இந்தப் படத்தில் இவர் மிகவும் கவனிக்கப்பட்டார். இந்த படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார் தினேஷ்.

இந்த நிலையில், அட்டக்கத்தி  தினேஷ் தற்போது 'கருப்பு பல்சர்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். முதன்முறையாக இரட்டை  வருடம் போட்டு மிரட்டி உள்ளாராம். 

மேலும் இந்த படத்தில் காதல், காமெடி, ஆக்ரோஷம் என அனைத்தும் அவருக்கு கைவந்த கலை என்பதை இயக்குனருக்கு நிரூபித்து உள்ள நிலையில், இயக்குனர் அவரை வியந்து பாராட்டி உள்ளதாகவும் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement