• Apr 15 2026

விசித்ரா முன்வைத்த குற்றசாட்டு.. நைசாக நழுவிய ஆண்டவர்! இறுதியில் விசித்ராவின் கணவர் சொன்ன ட்விஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவர் தற்பொழுது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.

இதில் இவர் விளையாடும் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு இவர் விளையாடி வரும் ஸ்ராட்டஜியும் நன்றாக உள்ளது.


இவ்வாறு, தனது சினிமா வாழ்க்கையில் இடம்பெற்ற கசப்பான அனுபவத்தை பிக் பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறிவிட்டது.

இந்த நிலையில், இவ்வாரம் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் விசித்ராவின் விவகாரம் தொடர்பில் கமல் விசாரிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதில் ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே நடிகை விசித்ராவின் கணவர் பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் இந்த பிரச்சனையை எல்லாம் காது கொடுத்து கூட கேட்க மாட்டார். இது பற்றி எந்த விசாரணையும் செய்யவும் மாட்டார் என்று சொல்லியிருந்தார். அது போலவே இப்போது நடந்து கொண்டிருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

Advertisement

Advertisement