• Jan 19 2025

திறமையாளர்கள் அனைவருக்கும் திரையில் பாட வாய்ப்பு! உறுதியளித்த பிரபல இசையமைப்பாளர்! குதூகலத்தில் சூப்பர்சிங்கர் ஜூனியர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் நிகழ்ச்சி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன்,  அதில் கலந்துகொண்ட திறமையாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், இறுதி கட்டத்தில்  கால் பதித்துள்ள சூப்பர் சிங்கர் ஜூனியரில் பைனலல் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்போது, நயன் தாராவின் அன்னபூரணி படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் திறமையாளர்கள் பாடிய பாடலும் குறித்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளக் கூடிய போட்டியாளர்களின் பெயர்கள் சின்ன சர்ப்ரைஸுடன் அறிவிக்கப்பட்டது. மேலும், இறுதிப்போட்டிக்கு தெரிவான ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகியோர் இணைந்து அன்னபூரணி படப்பாடாலைப் பாடியுள்ளனர். 

இவ்வார நிகழ்ச்சியில், நடுவராக கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு உற்சாகமாக கலந்துரையாடியதோடு, பலரின் வாழ்வை மாற்றும் வகையிலான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். 

அதன்படி, மிமிக்ரியில் கலக்கிய ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல் என பாடகர்களை உற்சாகப்படுத்திய தமன், நிகழ்ச்சியின் நடுவர் ஆண்டனி தாசனுக்கும் ஒரு பாடல் வாய்ப்பு தந்து அசத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திறமையான போட்டியாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன்

இதேவேளை, தற்போது இசையமைப்பாளர் தமனின் நெகிழ்ச்சியான செயல்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement