• Jan 18 2025

வெற்றிமாறனால் முடியாததை முடித்து காட்டிய ‘கள்வன்’ இயக்குனர்.. சுவாரஸ்ய தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ், இவானா, பாரதிராஜா உட்பட பலர் நடிப்பில் பிவி ரமேஷ் இயக்கத்தில் உருவான ‘கள்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடந்த நிலையில் இந்த விழாவில் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சற்றுமுன் இந்த டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய போது ஒரு சுவாரசியமான தகவலை தெரிவித்தார். ’விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் முதலில் ஒரு முக்கிய கேரக்டரில் பாரதிராஜா தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு முடியை ஷாட்ட் ஆக கட் செய்து ஒரு லுக் டெஸ்ட் எடுத்து பார்த்த போது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.

ஆனால் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை என்ற பகுதிக்கு நாங்கள் லொகேஷன் பார்க்க சென்றபோது அந்த இடம் மிகவும் அடர்த்தியான ஒரு காடாக இருந்தது. பாரதிராஜா வயதுக்கு இந்த காட்டிற்கு அவரை அழைத்து வந்து அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்பதால் அவரை இந்த படத்தில் இருந்து நீக்கினோம்.

ஆனால் பாரதிராஜா என்னிடம் மிகவும் கோபித்துக் கொண்டார், என்ன விளையாடுகிறாயா? என்னுடைய முடி எல்லாம் ஷார்ட் ஆக வெட்டிவிட்டு  இப்போது வேண்டாம் என்று சொல்கிறாயே? என்று கேட்டதற்கு அவரை நாங்கள் மிகவும் சிரமப்பட்டு சமாதானப்படுத்தினோம்.

இந்த நிலையில் பாரதிராஜா சமீபத்தில் என்னை சந்தித்தபோது நீ முடியாது என்று சொன்ன அதே இடத்திலேயே என்னை வைத்து ‘கள்வன்’ படம் இயக்குனர் இயக்கியிருக்கிறார் பார்த்தாயா? என்று கூறினார். அப்படிப்பட்ட ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.


Advertisement

Advertisement