தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை வழங்கிய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த சினிமா தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் ஊடாக சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, அயன், வேட்டைக்காரன், மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வெளியாகி உள்ளன.
பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய ஏவிஎம் நிறுவனத்தை தற்போது அவருடைய மகனான எம்எஸ் குகன் கவனித்து வருகின்றார்.
இதனிடையே, வயது மூப்பின் காரணமாக சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 86 வயது என கூறப்படுகிறது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் .
தற்போது இவருடைய மறைவு பலருக்கும் பேரிழப்பாக காணப்படுவதோடு, ரசிகர்களும் சமூக வலைத்தளங்களின் ஊடாக தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!