தமிழ் சினிமா வரலாற்றில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து தனக்கென தனி முத்திரை பதித்த திரைப்பட தயாரிப்பாளர் தான் ஏவிஎம் சரவணன். இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது இவருடைய மறைவுக்கு பலரும் நேரில் சென்று தமது அஞ்சலியை செய்து வருகின்றனர்.
இவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், அகில உலக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பதவி வகித்து, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
தற்போது மறைந்த ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, தனது எக்ஸ் தள பக்கத்திலும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் அவருடைய தந்தை சிவக்குமாரும் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். அவருடைய உடலை பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதுள்ளார் சூர்யா. சிவகுமாரும் கண்ணீர் சிந்தினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக அயன் திரைப்படம் காணப்படுகிறது. இந்த படத்தை தயாரித்தது ஏவி எம் சரவணன் தான். மேலும் பேரழகன் படத்தையும் சரவணன் தான் தயாரித்து உள்ளார்.
அதேபோல ரஜினிகாந்தும் சோகமாக சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடைய முரட்டுக்காளை, எஜமான், சிவாஜி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!