• Jan 22 2026

வாட்டர் மெலன் திவாகர் ரேஞ்சுக்கு விமலை டீல் செய்வது தவறு.! கொந்தளித்த ப்ளூ சட்டை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல்.  இதைத்தொடர்ந்து  களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என அடுத்தடுத்து  ஹிட் படங்களை கொடுத்தார். 

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விலங்கு வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றது. எனினும் அதற்குப் பிறகு விமல் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. 

விமல் நடிக்க வந்த அதே நேரத்தில் தான் சிவகார்த்திகேயன், சூரி  போன்ற நடிகர்களும் தங்களுடைய கேரியரில் வளர்ந்தனர்.  தற்போது சிவகார்த்திகேயன் சினிமாவில்  முன்னணி நடிகராக திகழ்கின்றார். சூரியும்  விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார். 


இதனால் நடிகர் விமலிடம் பேட்டி எடுக்கும் பெரும்பாலானோர் உங்களுடன் நடிக்க வந்த சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்கின்றனர்.  ஆனாலும் தன்னைச் சுற்றி  நெகட்டிவிட்டி இருந்தாலும் அதற்கு கூலாக பதில் அளிக்கின்றார் விமல்.  இதனால்   அவருடைய பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது  தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் மகாசேனா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படம்  எதிர்வரும் 12ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. 

இந்த நிலையில், இந்த படத்தின்  வெளியிட்டை முன்னிட்டு  தனியார் ஊடகம் ஒன்று  விமலை பேட்டி எடுத்தது. இதன்போது  தொகுப்பாளினி கேட்ட  கேள்விகளும் அதற்கு  ரணகளமாக விமல் கொடுத்த  பதிலும் வைரலாகி வருகின்றன .  

இதனால்  ப்ளூ சட்டை மாறன்  இதுபோன்ற கேள்விகளை வேறு சில மூத்த நடிகர்களிடம் கேட்கத் துணிவு இருக்காது. அப்படியே அவர்கள் கேட்டாலும் பிரபல நடிகர்கள் எழுந்து வெளியே போய் விடுவார்கள்.  வெற்றி, தோல்விகளை மனதில் வைத்து பேட்டி எடுக்கக் கூடாது.  உங்களை தாழ்த்திக் கொள்வதற்கு நீங்களே நீ வாய்ப்பளிக்க வேண்டாம் என்று  பதிவிட்டுள்ளார்.  தற்போது அவருடைய பதிவு  வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement