• Dec 04 2024

வெங்கட் பிரபுவுக்கு கொக்கி போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்! வைரல் போஸ்ட் இதோ..

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.விஜய் டிவி TRP ரேட்டிங்கிலும் இந்த சீரியல்தான் முதலிடத்தில் காணப்படுகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் சிறகடிக்க ஆசை  சீரியல் நாளாந்தம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் நடிக்கும் முத்து கேரக்டரும் மீனா கேரக்டரும் மிகவும் நல்லவர்களாக இருந்த போதும் இவர்கள்தான் அடிக்கடி பாதிக்கப்படும் கேரக்டர்களாக காணப்படுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையில் ரோகிணி கேரக்டரை திட்டி தீர்த்து வருகின்றார்கள் ரசிகர்கள். இதுவரை அவர் செய்துள்ள திருட்டு வேலைகள் எதுவும் வெளி வராத நிலையில் டைரக்டர் ரோகினிக்கு சார்பாக கதையை நகர்த்துவதாக தமது வெறுப்பை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

d_i_a

இந்த சீரியலில் தற்போது ரோகினி போட்ட திட்டத்தின் படியே சத்யாவின் வீடியோவை சிட்டிக்கு கொடுத்து மீனாவின் நிம்மதியை குழப்பி விடுகின்றார். இதனால் விஜயா மீனாவின் வீட்டுக்குச் சென்று சத்யாவுக்கு செருப்பை கழட்டி அடித்ததோடு மட்டுமில்லாமல் இனி வீட்டு பக்கம் வர வேண்டாம் என்று மீனாவுக்கு எச்சரித்து செல்கின்றார்.


இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பன் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபுவின் பட வாய்ப்பு எதுவும் தட்டி தூக்கி விட்டாரோ என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். பழனியப்பன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement