• Oct 09 2024

விஜய் கட்சி பெயரில் எழுந்த புதிய சிக்கல்... இந்த பெயரை விஜய்க்கு கொடுக்க விடமாட்டேன்... கொந்தளித்த வேல்முருகன்...

Kamsi / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  வலம் வந்தவர் தான் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.


 தற்போது மக்கள் நலனுக்கான தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு முழு நேரமாகவே  அரசியலில் இறங்க போவதாகவும் இனி சினிமா துறைக்கு வரப்போவதில்லை என்றும் கூறினார். 


 தற்போது விஜய்யின்  கட்சி பெயரில் ஒரு சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது . 'தமிழக வெற்றி கழகம்' என்ற இக் கட்சி பெயரை விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விஜய்யின் கட்சி பெயரை மாற்ற வேண்டும். என்று பேசியுள்ளார்,


"விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று வழங்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்"தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் TVK என்று வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் ஆரம்பிக்கப்பட்டு  கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.தமிழக வாழ்வுரிமை கட்சியும், ஆங்கிலத்தில் TVK என்று வருவதால், TVK என்பதை விஜய்க்கு வழங்க கூடாது என்று முறையிடுவோம்". என்று கூறியுள்ளார். 


Advertisement