• Apr 01 2025

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினாரா வரலட்சுமி? இதற்கு தான் பாஜகவில் இணைந்தாரா சரத்குமார்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் நடிகை வரலட்சுமியும் அதில் தொடர்புடையவர் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள துறைமுகத்தில் 300 கிலோ போதை பொருள் சிக்கியதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் வரலட்சுமியிடம் மேனேஜராக வேலை பார்த்த ஆதிலிங்கம் என்று தெரியவந்துள்ளது

இதனால் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்திற்கும் வரலட்சுமிக்கும் சம்பந்தம் உண்டா என்பது குறித்து விசாரணை செய்ய என்.. அவருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை வரலட்சுமி மறுத்துள்ள நிலையில் ஆதிலிங்கம் என்பவர் தன்னிடம் மூன்று வருடங்களுக்கு முன் மேனேஜராக வேலை பார்த்தவர் என்றும் அவருக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் அதன் பிறகு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் என்.. உள்பட யாரும் தனக்கு சம்மன் அனுப்பவில்லை என்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் ஒரு சில சமூக வலைத்தள பயனாளிகள் போதை பொருள் விவகாரத்தில் வரலட்சுமி சிக்கியதால்தான் அவருடைய தந்தை சரத்குமார் பாஜகவுடன் தன்னுடைய கட்சியை இணைத்துள்ளதாக வதந்தி கிளம்பி வருகின்றனர்

Advertisement

Advertisement