தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றார். நகைச்சுவை, காதல் மற்றும் பாடல்கள் ஆகியவற்றால் அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அதன்பின் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், இறுதியாக மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அரசியல் பின்னணியில் உருவான அந்த திரைப்படம், விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றிபெற்று, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.

அந்த படத்திற்குப் பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திய உதயநிதி, தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் தமிழகத்தின் துணை முதல்வராகவும் உயர்ந்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் திரையுலகிற்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அரசியல் சார்ந்த கதைக்களங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அவரது மகன் இன்பநிதி தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்புகளை கவனித்து வருவதும் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!