விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூல் நிலவரமும் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படம், கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்த திரைப்படம் என்பதால் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருந்தன.

அதேநேரம், கவின் - நயன்தாரா ஜோடி பொருத்தம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கலவையான கருத்துக்கள் எழுந்தன. இதனால் படம் வெளியான பிறகு அவர்களது கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்பதையும் ரசிகர்கள் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், படத்தின் வசூல் தொடர்பான தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் நான்காவது நாள் வசூல் ரூ.1.01 கோடியாக இருந்ததாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளுடன் ஒப்பிடும்போது வசூல் சற்று குறைந்திருந்தாலும், மோசமான சரிவு இல்லை என்றே தெரிகிறது.
இதுவரை நான்கு நாட்களில் ‘ஹாய்’ திரைப்படம் ரூ.6.61 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் விடுமுறை மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து வசூல் மேலும் அதிகரிக்குமா என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!