• May 04 2026

அரசியலில் புயலைக் கிளப்பிய தளபதி.. - பறந்து வந் பாலிவுட்டின் நடிகரிடம் இருந்துத வாழ்த்து

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னிலை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது. 


புதிய அரசியல் கட்சியாக இருந்தபோதிலும், இவ்வளவு பெரிய அளவில் முன்னிலை பெறுவது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. பல இடங்களில் விஜய் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வாழ்த்துகளையும் ஆதரவு பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், விஜயின் முன்னிலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவரது புதிய அரசியல் பயணத்திற்கு வெற்றி வேண்டி வாழ்த்தியுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

திரைப்படத்திலிருந்து அரசியலுக்கு வந்த விஜய்க்கு பிற மொழி திரையுலக நட்சத்திரங்களிடமிருந்தும் ஆதரவு கிடைப்பது அவரது வளர்ச்சியின்  தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.


Advertisement

Advertisement