மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் குறித்து கலவனான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நேற்று ரசிகர்களுடன் இணைந்து நடிகை திரிஷா படம் பார்த்த ஒரு வீடியோ செம வைரலாகி இருந்தது.

அஜித்துடன் இணைந்து திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா ,ஆரவ் ஆகியோர் நடித்துள்ள இப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஒருநாளில் 40 கோடி அளவில் இப் படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு சில தரப்பிடம் இருந்து இப் படம் average என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ செம வைரலாகியுள்ளது.அந்த வீடியோவில் படம் முடிந்து திரிஷா வெளியேறும் போது ரசிகர் ஒருவர் திரிஷா mam ஆக்டிங் சூப்பர் என கூறியதற்கு திரிஷா அவரது நண்பருக்கு "நல்ல வேளை சூப்பர்னு சொல்லிட்டான்" என சிரித்தபடி கூறி வெளியேறியுள்ளார்.குறித்த வீடியோ தற்போது அதிகமாக அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!