• Mar 12 2025

சின்ன படம் அல்லது பெரிய படம்..! எனக்கு வேறுபாடு இல்லை என கூறும் இமான்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமாகிய டி .இமான் அவர்கள் 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இவரது பாடல் மற்றும் இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம்.


இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் மாத்திரமின்றி நல்ல மனிதரும் கூட எனெனில் தான் இறந்ததற்கு பின்னரும் தனது உடல் உறுப்புகள் இன்னொருவருக்கு பயன்பட வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தில் சமீபத்தில் தனது முழு உடலினையும் தானம் செய்துள்ளார்.


இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியாகும் படங்கள் குறித்து "ஒரு படம் பெரிய படமா, இல்ல சின்ன படமானு வெள்ளிக்கிழமை தான் டிசைட் ஆகுது. பண்ணும்போது எல்லாம் ஒரே படம்தான். இரண்டு மணி நேரம் ஓடுது. இசையாக பார்க்கும் போதும் எல்லாம் ஒன்னு தான். அந்தப் படத்துக்கு தேவை என்னவோ அதை தான் பண்ண போறோம். என்ன, பெரிய படங்களுக்கு சம்பளம் கொஞ்சம் பெருசாக கிடைக்கும். சின்ன படங்களுக்கு சம்பளம் கொஞ்சம் அதிகமா கிடைக்காது. எல்லாத்தையும் தாண்டி ஒரு மன நிறைவு வந்து, சின்ன படங்கள் கான்செப்ட் ஓரியண்டட், ஸ்கிரிப்ட் ஓரியண்டல் படங்கள் பண்ணும் போது கிடைக்கும்" என மிகவும் அருமையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement