• Apr 27 2024

பிக்பாஸ் அமீருடன் நடனமாடிய த்ரிஷா- சிரித்து சிரித்து பார்த்து ரசித்த சிம்பு- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனை அடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் ஷுட்டிங்கும் விரைவாக நடைபெற்று வருகின்றது. 14 வருடங்கள் கழித்து விஜய்யும் த்ரிஷாவும் ஒன்று சேர்ந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் த்ரிஷா அண்மையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடனமாடிக் கொண்டிருந்த அமீர் த்ரிஷாவின் கைகளைப் பிடித்து அவரை மேடையில் ஏற்றி நடனமாட வைத்தார்.


த்ரிஷா இவ்வாறு வைஃப் ஆனதைப் பார்த்த சிம்பு சிரித்துக் கொண்டிருந்தார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement