• Apr 20 2024

தலை கீழாக நடந்து வந்து மகாவைத் தூக்கிய 'ஆஹா கல்யாணம்' சூர்யா.. ஆட்டம் பாட்டத்துடன் வெளிவந்த ஸ்ராட் மியூசிக் ப்ரோமோ வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதில் பல ரியாலிட்ரி ஷோக்கள் ரசிகர்களைக் கவரும் வகையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் 'ஸ்ராட் மியூசிக்'. இந்த நிகழ்ச்சியினை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றார்.


3சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சியில் தற்போது இதன் 4-ஆவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வானது கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் ஸ்ராட் மியூசிக் ஷோவில் இந்த வாரம் ஆஹா கல்யாண சீரியல் குழுவினர் வருகை தந்துள்ளனர். அதில் தொகுப்பாளினி பிரியங்கா சூர்யாவை அழைத்து மகாவை தூக்குமாறு கூறுகின்றார். சூர்யாவும் மேடையில் தலையால் நடந்து வந்து மகாவைத் தூக்குகின்றார். பின்னர் இருவரும் சேர்ந்து அழகிய நடனம் ஒன்றினையும் ஆடுகின்றனர்.

இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement