• Jan 18 2025

புதையல் தேடி திகில் பயணம்...! பயங்கரமாக ரிலீசானது "கஜானா" டிரெய்லர்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை தேடி இளைனர்கள் போகும் சாகச பயணம் தொடர்பாக இருக்கும் திரைப்படம் தான் "கஜானா" இப்படத்தில் யோகி பாபு, வேதிகா, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். 


இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. 


இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகை வேதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதோ அந்த டிரெய்லர் 


Advertisement

Advertisement