• May 11 2026

கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டொவினோ-நஸ்ரியா… ப்ரமோஷனா இல்ல திட்டமிட்ட செயலா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர்களான டொவினோ தாமஸ் மற்றும் நஸ்ரியா நசீம் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய படத்திற்கான டைட்டில் அறிவிப்பு வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


‘Gracias El Clasico’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டிலை, ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற Camp Nou மைதானத்தில் நடைபெற்ற El Clasico போட்டியின் நடுவே வெளியிட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கவனித்த அந்த தருணத்தில் டைட்டில் ரிலீஸ் செய்யப்பட்டதால், கால்பந்து ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் முஷின் பராரி இயக்குகிறார். அவரின் தனித்துவமான கதை சொல்லும் பாணி காரணமாக இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

டொவினோ தாமஸ் மற்றும் நஸ்ரியாவின் கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘Gracias El Clasico’ திரைப்படம் காதல் உணர்வு கலந்த பின்னணியுடன் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டில் அறிவிப்பே இப்படத்திற்கு பெரிய ப்ரமோஷனாக மாறியுள்ளதால், தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement