ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த ‘கிங்ஸ்டன்’ படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. திரில்லர் மற்றும் ஹோரர் என இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பற்றிய ரசிகர்களின் கருத்து தற்பொழுது சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.
படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ‘கிங்ஸ்டன்’ பற்றிய கருத்துகள் குவிந்துள்ளன. இதன்போது சிலர் "படம் தாறுமாறு!" என பாராட்டினார்கள் எனினும் ஒருசாரார் "இது உண்மையிலேயே தக்காளி சோறு!" என கிண்டலாக விமர்சிக்கிறார்கள்.
அந்தவகையில் ‘கிங்ஸ்டன்’ ஒரு திகில் மற்றும் மர்மம் கலந்த திரைக்கதை கொண்ட படமாக உள்ளது. இதனால், ஹோரர் படங்களை விரும்பும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளை நோக்கிச் சென்றனர். ஆனால் படம் வெளியான பிறகு, இது ‘ஒரு முழு ஹோரர் படமா அல்லது திரில்லரா?’ என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஹோரர் மற்றும் திரில்லர் என இரண்டும் கலந்த ஒரு புதிய அனுபவத்தை வழங்க முயற்சி செய்திருக்கிறார்கள். மேலும் ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்தில் மர்மம் சூழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் நடிப்பை சிலர் மிகவும் பாராட்டியிருந்தாலும் மற்றவர்கள் "ஜி.வி. பிரகாஷ் படங்களில் நடிக்காமல் பாடல்களை மட்டும் இசையமைக்கட்டும் " என விமர்சிக்கின்றார்கள்.
Listen News!