தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, பலரும் "இது விஜயின் ஆதரவால் ஏற்பட்ட ஒரு முடிவு" என்று பேசினார்கள்.
ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, ஜேசன் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பு விஜய் மூலம் கிடைக்கவில்லை நடிகர் உதயநிதி ஸ்டாலின் மூலமாகவே இது நடந்தது என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் விஜயின் மகனாக இருந்தாலும், ஜேசன் சஞ்சய் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க தனியாக முனைந்து உள்ளார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கனடாவில் திரைப்படங்களை பற்றிய பாடப்பிரிவில் பயின்று வந்த அவருக்கு, இயக்குநராக வரவேண்டும் என்ற இலக்கு நீண்ட நாட்களாக இருந்தது.
உதயநிதி ஸ்டாலின், லைகா நிறுவனத்துடனான தனது உறவைப் பயன்படுத்தி ஜேசன் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததாக சிலர் கூறுகின்றனர். அத்துடன் விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே ஏற்கனவே நல்ல உறவு உள்ளது. இது அந்த உறவின் தொடர்ச்சியாலேயே உதயநிதி இப்படி செய்ததாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Listen News!