• Jan 18 2025

தீரா வலியுடன் வந்த இளையராஜா... மகளை பார்த்ததும் செய்த செயல்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் காலமானார். 


இந்த நிலையில், உயிரிழந்த மகளின் உடலை பார்க்க இளையராஜா வரவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது். இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இளையராஜா, தனது மகள் இறந்த செய்தியை கேட்டு உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்து இருந்தார்.


இவ்வாறான நிலையில், அவர், சென்னை வர முடியாது என்பதால், நேற்றைய தினம்  பவதாரணியின் உடலுக்கு சென்னையில் அவரால் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் இன்று அவரது உடல் தேனியில் அடக்கம் செய்யப்ப உள்ளதால், இளையராஜா இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து தனது மகளின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளார். 


தன் மகளை பார்த்து சொல்லமுடிய சோகத்துடன் மனமுடைந்து நின்ற இசைஞானியை காணக்கூடியதாக இருந்தது. மகளை நன்றாக உற்று பார்த்து கணங்கள் கண்ணீரில் மிதக்க அவர் அருகிலே அமர்ந்து பவதாரணியின் உடலை பார்த்து கொண்டிருந்தார். 

Advertisement

Advertisement